×

மஹிமா கிராமத்துக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படும்: அமைச்சர் உறுதி

சட்டமேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பாஜ உறுப்பினர் முனிராஜ்கவுடா பேசும்போது, வடகனரா மாவட்டம், மஹிமா கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் இருப்பதால், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு  வருகிறார்கள். மேலும் கிராமத்தில் இருந்து சுமார் 8 கி.மீட்டர் தூரம் ஆரம்ப பள்ளிகளுக்கும் 20 முதல் 30 கி.மீட்டர் தூரம் உயர்நிலை பள்ளி, கல்லூரிகளுக்கு நடந்து செல்கிறார்கள்.

சில குடும்பங்களை சேர்ந்தர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் நிறுத்தியுள்ளதால், கல்வி பயில  முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். உறுப்பினரின் கேள்விக்கு கல்வியமைச்சர் சுரேஷ்குமார் பதிலளிக்கையில், மஹிமா  கிராமத்தில் நிலவும் பிரச்னையை உறுப்பினர் அவை மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதை வரவேற்கிறேன். விரைவில் மஹிமா கிராமத்திற்கு பஸ் வசதி  செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Tags : Mahima , Mahima Village, Bus Facility, Minister, Confirmation
× RELATED அக்டோபர் 6ல் 10 படங்கள் ரிலீஸ்